இந்திய திருநாட்டின் 75வது சுதந்தர தினம் நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது, இதன் ஒரு பகுதியாக அனைத்து வீடுகளிலும், அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடியை 3 நாட்களுக்கு இரவிலும் ஏற்ற சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது, இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான வீடுகளிலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெரியப்பட்டி ஊராட்சி சிக்களூரில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் தேசியக்கொடி அலுவலக கதவின் தாழ்ப்பாளில் கிடைமட்டமாக கட்டி தொங்கவிடப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்தது, இது குறித்து நமது தமிழக குரல் சார்பாக செய்தியும் வெளியிட்டோம், நமது செய்தியின் எதிரொலியாக அந்த கொடி அங்கிருந்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்ததில் அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக ஆதிநாராயணன் என்பவர் பணியாற்றி வருகிறார், சம்பவ நிகழ்வின் பொழுது அவர் அந்த பகுதியில் இல்லையென்பது தெரியவந்தது, மேலும் இது குறித்து விசாரணை செய்ததில் கிராம நிர்வாக அதிகாரியான ஆதிநாராயணன் மீது கழ்புணர்ச்சி கொண்ட மர்ம நபர்கள் யாரோ இப்படி செய்திருக்கலாம் என தெரியவந்தது.
இது குறித்து பெரியப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி திருமதி.லலிதா அவர்களின் கணவர் திரு.ரவி என்பவரிடம் பேசுகையில் இது கிராம நிர்வாக அதிகாரி மீது கழ்புணர்ச்சி கொண்ட யாரோ செய்திருக்கிறார்கள் என தெரிவித்தார், இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



