தருமபுரி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் இணைந்து நடத்துகின்ற மாணவர்களுக்கான 32 வார பயிலரங்கின் 21-வது வார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மருத்துவர் இரா. செந்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆரோக்கிய வாழ்விற்கு உணவு முறை என்ற தலைப்பில் சிறப்பையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதல் நிலை நூலகர் இரா. மாதேஸ்வரன், இரண்டாம் நிலை முதல் மாதேஸ்வரன், வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணன் வீரராகவன், தலைமை ஆசிரியர் மா. பழனி மற்றும் நூல் கட்டுநர் சரவணன் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


