Type Here to Get Search Results !

மனைவியின் நினைவு நாளில் அவர் பிரிவை தாங்க முடியாத காவலர் தூக்குபோட்டு தற்கொலை.

நல்லம்பள்ளி அருகே மனைவியின் நினைவு நாளில் அவர் பிரிவை தாங்க முடியாத காவலர் உறுக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் வயது 55 இவர் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர்.

முதல் மனைவி முனியம்மாளுக்கு ஒரு ஆண் (விஜய்) குழந்தையும் இரண்டாவது மனைவி இந்திராகாந்திக்கு ஒரு ஆண் குழந்தை (சுந்தரேசன்) ஒரு பெண் குழந்தை(இனிதா ) உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடமங்கலத்தில் இருந்து கொண்டு காவலர் பணிக்கு செல்லாமல் தேங்காய் வியாபாரம் செய்து கொண்டு  வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஒரு வருடம் முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரன் தன் மனைவியை அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.  முதல் மனைவியின் மகன் விஜய் மற்றும் தன்னுடைய உறவினர்கள் இருக்கும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூர் உறவினர் வீட்டில் இரண்டு மாதங்களாக தங்கி இருந்துள்ளார். முதல் மனைவியின் நினைவு நாளான கடந்த 11.8.22 அன்று காலை முதலே மனம் உடைந்த நிலையில் மனைவியின் நினைவாக அழுது கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். 

அதனை அடுத்து நேற்று இரவு நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துள்ளார். அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் தொப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மகேஸ்வரன் தான் தூக்கு மாட்டிக் கொண்ட மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார். அதில் தன் மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் என் மனைவியின் உயிர் பிரிந்ததற்கு நான் தான் காரணம் என்பதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை.  மேலும் தன்னுடைய மகன் விஜய்க்கு நீ என்னை மன்னித்துவிடு உனக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்து விட்டேன். இனியும் நீ இங்கு இருக்க வேண்டாம் நீ உன் தாத்தா பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று விடு மேலும் உன் மாமாவிடம் பணம் கொடுத்து உள்ளேன் அதை வாங்கி என் இறுதிச் சடங்கை முடித்து விடவும் என்று தன் மகனுக்கும் உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார். 

தொப்பூர் காவல் ஆய்வாளருக்கும் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு இது நானாக எடுத்துக் கொண்ட முடிவு என் மரணத்திற்கும் மற்ற யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல் ஆய்வாளர் யமுனாதேவி எஸ் பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்த மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதங்களையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies