தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 15.08.2022 நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இலளிகம் பஞ்சாயத்து சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் 2021-2022 கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அந்த பாட ஆசிரியர்கள் சார்பாக கேடயங்கள் மற்றும் ரொக்க தொகையும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 3 மாணவர்களுக்கு இப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் சார்பாக கேடயங்கள் மற்றும் Dictionary வழங்கப்பட்டன.
பள்ளி மேலாண்மை குழு சார்பில் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


