தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் பெய்த கன மழையால் சாலையில் தேங்கி நின்ற மழை நீர் - இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பாப்பாரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்தன. இதனால் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மழைக்காலங்களில் இது போன்ற நிலை தொடர்வதால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை அளித்தம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், சாலைகளிலும் வீடுகளிலும் தெருக்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

