அதேபோல் இன்று அதிகாலை சவுலூர் பகுதியில் பாகலஹள்ளியில் பா.ம.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக உள்ள முருகன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட்டை சுமார் 2.30 மணி அளவில் 3 பேர் அடங்கிய கும்பல் திருட முயற்சி செலுத்துள்ளனர். அப்பொழுது வீட்டின் வெளியே வந்து பார்த்த முருகன் தன்னுடைய பைக்கை திருடும் கும்பலை கண்டு ஆத்திரம் அடைந்து அவர்களை தடுக்க முயற்சித்துள்ளார்.
இருப்பினும் சுதாரித்து கொண்ட திருடர்கள் அவருடைய புல்லட் பைக்கை திருடி சென்று விட்டனர். மற்றொரு இளைஞரை மடக்கி பிடிக்க முயன்ற பொழுது அவன் கொண்டு வந்த பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டான். இது குறித்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேரும் முக கவசம் அணிந்துள்ளனர்.
இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அடங்கிய கும்பல் வாகனப் பதிவின் இல்லாத பைக்குகள் மற்றும் கண்களுக்கு தெரியாத அளவில் சிறியதாகவும் மற்றும் அதி வேகமாக செல்லக்கூடிய பைக்குகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவுடன் உடனடியாக அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்று விடுகின்றனர். மேலும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நன்கு உறங்கும் வேளையில் தான் இவர்கள் தங்கள் திருட்டு கைவரிசையை காட்டி வருகின்றனர்.
இதேபோல் ஆடுகளைத் திருடும் கும்பல் இன்னோவா காரை பயன்படுத்தி சத்தம் இல்லாமல் ஆடுகளை இந்த சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து திருடி வருகின்றனர். இந்த தொடர் திருட்டு சம்பவம் இப்பகுதியில் தொடர் கதையாகி விட்டதால் அப்பகுதியில் சாலையோரம் உள்ளவர்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை உள்ளது. காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது வாகன பதிவு எண்கள் இல்லாத வாகனங்களின் மீதும் அதனை பயன்படுத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ரோந்து பணியை நள்ளிரவு நேரங்களை போல் அதிகாலை நேரங்களிலும் அதிகம் மேற்கொண்டால் இது போன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபவர்களை எளிதில் பிடிக்க முடியும். இது காவல்துறையின் கையில் தான் உள்ளது. நடைபெற்ற சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


