தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு உள்ள லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் இரவு முழுவதும் ஓய்வெடுத்து பின்பு காலை நேரங்ளில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சுற்றி பார்ப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஒகேனக்கல்லில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு, இரவு முழுவதும் கூட நீடித்து வருகிறது.
இரவு முழுவதுமே மின் இணைப்பு வழங்கப்படாததால் இதுகுறித்து மின் ஊழியர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கேட்டபொழுது சரியான பதில் அளிக்காமல் தொலைபேசியை துண்டிக்கப்பட்டுள்ளனர். மின் பணியாளர்கள் பணிக்கு சரியாக வராதது இந்த மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்றும் விடுதி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் இதுபோன்று மின் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுவதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் லாட்ஜ் உரிமையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆலாகுவது மட்டும் அல்லாமல், இரவு நேரத்திர் தங்கும் சுற்றுலா பயணிகள் தூக்கம் இல்லாமல் அள்ளல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


