பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி, இந்த பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், இவர் இந்தாண்டு ஆசிரிய பணியிலிருந்து ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று நாடுமுழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, பேடரஹள்ளி பள்ளியிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, சுதந்திர தின விழாவில் அப்பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தலைமை ஆசிரியை தமிழ்செல்வி அவர்கள் இந்தாண்டு ஓய்வு பெற உள்ளதால், இந்த ஆண்டு தேசியகொடியை ஏற்ற பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி நான் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேசியகொடி ஏற்றி வணக்கம் செலுத்த மாட்டேன் என்றும் நான் என்னுடை கடவுளுக்கு மட்டும் வணக்கம் செலுத்துவேன் என கூறி தேசிய கொடி ஏற்ற மறுத்துவிட்டார்.
இதை கேட்ட கிராம மக்கள் அதிர்சியடைந்தனர், இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவர் அலுவலகத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட கல்வி துறை தலைமை ஆசிரியைக்கு 17B பிரிவின் (தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள் (17B - irregularity or negligence in the discharge of official duties with a dishonest motive) கீழ் ஒழுங்கு முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர் தற்போது விடுப்பில் இருப்பதால் விடுப்பிலிருந்து வந்த உடன் உரிய விளக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இல்லையெனில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.


