Type Here to Get Search Results !

பாலக்கோடு தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற கிராம கூட்டம்.

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (வரை), பாலக்கோடு தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 24.08.2022ந் தேதியன்று நடைபெற்ற கிராம கூட்டம்.

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட ஆலைப்பகுதி கோட்டத்தில் உள்ள எண்டப்பட்டி கிராமத்தில் 24.08.2022ந் தேதியன்று கிராம கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலையின் மேலாண்மை இயக்குநர் திரு.ந.சக்திவேல் அவர்கள் தலைமை வகித்தார். ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் திரு.தொ.மு.நாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். கரும்பு பெருக்கு அலுவலர் திரு.பு.வேணுகோபால் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து அனைத்து கரும்பு அலுவலர்களும் சிறப்புரை ஆற்றினர். மேலும் இப்கோ நிறுவன விற்பனை பிரதிநிதி திரு.ஷேக்அப்துல்லா அவர்கள் நானோ யூரியா தெளித்தல் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினர். மேலும் ட்ரோன் மூலம் நானோ யூரியா குறித்து செயல் விளக்கம் திரு.மாரியப்பன் மற்றும் திரு.சின்னசாமி அவர்களின் கரும்பு வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.

இதனை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையத்தை சார்ந்த விஞ்ஞானிகள், கரும்பு விவசாய அங்கத்தினர்கள் பார்வையிட்டனர். இக்கூட்டத்தில் அனைத்து கரும்பு அலுவலர்கள், கரும்பு பெருக்கு உதவியாளர்கள், கரும்பு உதவியாளர்கள் மற்றும் திரளான கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies