மத்திய அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சகம் சார்பில் தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக இன்று நல்லம்பள்ளி ஒன்றியம் மாரியம்பட்டி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்ட இரு வார விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக மாரியம்பட்டி கிராமத்தில் உள்ள நூலகம் மற்றும் அரசு பள்ளி வளாகம் தூய்மை படுத்தப்பட்டது. பின்பு மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் வீடு தோறும் தேசிய கொடி நிகழ்ச்சிகான விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. அ. சரஸ்வதி, நேரு யுவகேந்திரா சார்ந்த திரு. ஹரிபிரசாத் மற்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடவு பணிகளை மாரியம்பட்டி Dr. APJ அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தினார்.