ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கும் மற்றும் அனைத்து மாநில அரசு பணியாளர்களுக்கும் சுதந்திர தினத்தை மிகவும் உற்சாகமாய் கொண்டாட அனைவரும் தன்னுடைய வீட்டிற்கும் மேல் இந்திய மூவர்ணக் கொடி பறக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆயிரம் கதர் மூவர்ண கொடிகளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கும் துப்புரவு பணியாளர், தூய்மை காவலர், ஊராட்சி மன்ற பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாய் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் ஹரி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்திய தேசிய மூவர்ண கொடியை இலவசமாய் பெற்றுச்சென்றனர்.