தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து, தீர்த்தகிரி நகரை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் இன்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை, அதே போல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக புகார் அளித்தார்.
அப்போது உதவி மின்பொறியாளர் இல்லாததால் அங்கிருந்த வணிக ஆய்வாளர் குப்புராஜ் (47), என்பவர் புகார் கொடுக்க வந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது புகார் கொடுக்க வந்தவர்கள் குப்புராஜியை மெபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் அலுவலகத்திற்குள் அடுக்கி வைத்திருந்த மின்மீட்டரை எடுத்து வீடியோ எடுத்தவர்கள் மீது வீசி தாக்க முயன்றார்,இதில் புகார் கொடுக்க வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவியது. இதனையடுத்து வெள்ளிசந்தை செயற்பொறியாளர் வனிதா விசாரணை செய்தார். இதனையடுத்து வணிக ஆய்வாளர் குப்புராஜியை சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டார்