அதன்படி, நாடு முன்னேற வேண்டுமாயின் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும். அத்தகையை இலட்சியத்தினை அடையும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ துறையானது ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டம் (Entrepreneur Development Scheme), இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (Self Employment Programme for youth), மகளிர் சுய உதவிக் குழுக்களுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் (Economic Assistance to Self Help Group Scheme), மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (Land Purchase Scheme), நிலம் மேம்பாட்டு திட்டம் (Land Development Scheme), துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் (Fast Track Power Supply), மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி திட்டம் (District Collector Discretionary Fund), மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதித் திட்டம் (Managing Discretionary Fund), தாட்கோ, தலைவரின் விருப்புரிமை நிதித் திட்டம் (Chairman, TAHDCO Director Discretionary Fund) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, இணையதளம் விண்ணப்பிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு உரிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்கனவே குடும்ப அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும் வகையில், தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(சிஉதி) துறையின் அரசானை (நிலை) எண்.60, நாள்:26.07.2022-ன்படி நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தாட்கோ நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 109 பயனாளிகளுக்கு ரூ.8.18 கோடி மதிப்பீட்டிலான 109 டிராக்டர்கள் வாங்குவதற்கு தாட்கோ மானியமாக ரூ.2.45 கோடியும், 6 பயனாளிகளுக்கு ரூ.45.00 இலட்சம் மதிப்பில் 6 புதிய பால்பண்ணை அமைக்க தாட்கோ மானியமாக ரூ.13.50 இலட்சமும், 2 பயனாளிகளுக்கு ரூ.15.00 இலட்சம் மதிப்பில் 2 ஆடை தயாரிக்கும் நிறுவனம் அமைக்க தாட்கோ மானியமாக ரூ.4.50 இலட்சமும், 3 பயனாளிகளுக்கு ரூ.22.50 இலட்சம் மதிப்பீட்டிலான 3 சுற்றுலா வாகனங்கள் வாங்க தாட்கோ மானியமாக ரூ.6.75 இலட்சமும், நிலம் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகள் அமைக்க 3 பயனாளிகளுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் 3 கிணறுகள் அமைக்க தாட்கோ மானியமாக ரூ.4.51 இலட்சமும், 5 பயனாளிகளுக்கு ரூ.20.83 இலட்சம் மதிப்பீட்டில் 5 புதிய ஆழ்துளைகிணறுகள் அமைக்க தாட்கோ மானியமாக ரூ.6.25 இலட்சமும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 17 இளைஞர்களுக்கு ரூ.1.28 கோடி மதிப்பீட்டிலான 17 டிராக்டர்கள் வாங்குவதற்கு தாட்கோ மானியமாக ரூ.38.25 இலட்சமும், 4 இளைஞர்களுக்கு ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலான 4 சுற்றுலா வாகனங்கள் வாங்குவதற்கு தாட்கோ மானியமாக ரூ.9.00 இலட்சமும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டத்தின் கீழ் 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் 4 புதிய புளி தயாரித்தல் நிறுவனங்கள் அமைக்க தாட்கோ மானியமாக ரூ.10.00 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 153 பயனாளிகளுக்கு டிராக்டர்கள், பால்பண்ணை, ஆடை தயாரித்தல், சுற்றுலா வாகனங்கள், புதிய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்காக ரூ.11.18 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் மேற்கொண்டு, பொருளாதாரம் ஈட்டுவதற்கு தாட்கோ மானியமாக ரூ. 3.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


