என் குப்பை என் பொறுப்பு என் நகரம் என் பெருமை மை தருமபுரி அமைப்பிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பாக தமிழகம் முழுவதும் குப்பைகளை அகற்றி தூய்மை தமிழகமாக மாற்ற என் குப்பை என் பொறுப்பு என் நகரம் என் பெருமை தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் அனைத்து நடவடிக்கைகளிலும் மை தருமபுரி அமைப்பு கைகோர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக மை தருமபுரி அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றுகளை இன்று நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அவர்களின் தலைமையில் நடந்த விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


