தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மொரப்பூரில் இன்று நடத்தப்பட்டது.விழிப்புணர்வு பேரணி மருதம் பள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
பேரணியை மொரப்பூர் காவல் ஆய்வாளர் வசந்தா தொடங்கி வைத்தார். மருதம்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் தவமணி பேரணிக்கு தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் திலகரசன் முன்னிலை வகித்தார்.400க்கும் மேலான மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பங்கேற்ற அனைவரும் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் பாலாஜி கேர் பவுண்டேசன் நிறுவனர் மெளலிதரன்பாலாஜி, விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன், நைனாம்பட்டி காமராஜர் இளைஞர் மன்ற தலைவர் அரிராம் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.

