Type Here to Get Search Results !

முதல்வரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட மாற்றுத்திறனாளி.

அரூர் மேல் பாட்ஷா‌‌பேட்டையைச் சேர்ந்த காதர் பாஷா, இவரது மனைவி ஷபானா மாற்றுத்திறனாளி, இவருக்கு 6 வயதில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இவரது கணவர் வாழ்வாதாரம் இல்லாமல் கிருமி நாசினி விற்பனை செய்து வருகின்றார்.

கடந்த 6 வருடங்களாக தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை அவரின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து அவர் கூறுகையில்; அரசு வேலைக்கான எனது கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து மனு அளிக்க பல முறை முயற்சித்தேன். ஆனால் அது பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுவிட்டது.

தற்போது தமிழக முதல்வரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து தனது கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும், குறிப்பாக நல்ல நிலையில் இருக்கும் ஒரு ஆண் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை நலன் கருதி அரசு வேலையில் முன்னுரிமை அளித்து அரசு வேலை வழங்க வேண்டும்.

அரசு வேலைகளில் முன்னுரிமை அடிப்படையில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்குவது போல் மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் அரசு வேலையில் பணி அமர்த்தியது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தனது மனுவில் குறிப்பிட்டு வலியுறுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.

இதற்காக அரூரிலிருந்து சென்னைக்கு சுமார் 360 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். மேலும் தங்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies