தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வாரச்சந்தை மற்றும் பஸ் நிலையபகுதிகளில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி உத்தரவின் பேரில் நலப்பணிகள், மருத்துவ பணிகள் தொழுநோய் பிரிவு மற்றும் தர்மபுரி சுகாதார பணிகளின் இயக்குனர்களின் அறிவத்தலின்படி பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
சிவந்து வெளிறிய உணர்ச்சி அற்ற தேம்பல், கை கால்களில் மதமதப்பு, தோலில் மினுமினுப்பு மற்றும் பல அறி குறிகள் தொழுநோய் வர வாய்ப்புகள் உள்ளதாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. பென்னாகரத்தில் நடைபெற்ற விழிப்புனர்வு நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திர பாபு, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் துளசிராமன், பென்னாகரம் சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன், வினோத் உள்ளிட்டவர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


