பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் மத்திய அரசின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் திட்டமான ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த கடந்த மாதங்களுக்கு முன்பு குழாய்கள் பதிக்கப்பட்டது.
அவ்வாறு தோண்டப்பட்ட குழி சில இடங்களில் மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது, இந்த குழிகளில் விழுந்து பலர் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தில் சிக்கியதும், இதில் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக பேருந்து நிலையம் பகுதிகளில் முதியவர் ஒருவர் தோண்டப்பட்ட குழிகளை மண் மற்றும் கற்களை கொண்டு மூடி வருகிறார், இது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது, அதே போல் முதியவரின் சமூகப்பணியை பலர் பாராட்டி வருகின்றனர்.


