காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது, நீர்வரத்தானது இன்று இரண்டு இலட்சம் கன அடிக்கும் மேல் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பாதுகாப்பு கருதி விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இந்த தடைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
