Type Here to Get Search Results !

கர்நாடகா அணைகளில் 2.12இலட்சம் கனஅடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கர்நாடகா மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைகளின் பாதுகாப்பு கருதி இன்று மாலை வினாடிக்கு 2 லட்சத்து 12 ஆயிரம்கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நீர் நாளை காலை ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை நாளை பிற்பகல் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவேரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டணம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மத்திய நீர் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக உள்ளது, மேலும் கர்நாடகா அணைகளிருந்து 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது, மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை கொடுத்துள்ளதோடு, தீவிர கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies