தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள சாமத்தால் கிராமத்தில் நடுகற்கள் இருக்கும் தகவல் நண்பர்களின் வழியே தெரிய வந்தது. கடந்த ஞாயிறன்று தர்மபுரி ஜெயம் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பென்னாகரம் சுற்றுவட்டார தொல்லியல் தடயங்களை அறியும் பயணத்தின் நடுகற்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
விவசாயத்திற்கு தோட்டத்தை சமன்படுத்தும் போது, வயலில் கிடைத்த நடுகல்லை, ஏதோ வேண்டாத பாறை என நினைத்து பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள குப்பை மேட்டில் வீசிவிட்டிருந்தனர், முதலில் ஒரு நடுகல் மட்டுமே இருப்பதாக குழுவினர், பின்னர் அவ்விடத்தை சுத்தம் செய்தபோது அங்கு மொத்தம் மூன்று நடுகற்கள் இருப்பது தெரியவந்தது.
அவற்றை மீட்டு சுத்தம் செய்து செய்து படியெடுக்கப்பட்டதோடு அருகாமையில் வசிக்கும் உள்ளூர் மக்களிடம் அந்த நடுகற்களின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினர்.
