இது குறித்து அங்கு பயிலும் மாணவிகள் கூறும்போது, இது நாள்வரை தற்காலிகமாக தருமபுரி அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுவந்த கல்லூரி தற்போது சொந்த கட்டிடத்தில் பைசுஹள்ளி அருகில் அமைத்துள்ளது, இந்த கல்லூரிக்கு உரிய விடுதி கல்லூரி வளாகத்தில் இன்னும் அமைக்கப்படவில்லை, தற்போது தருமபுரியில் அரசு காலை கல்லூரியின் விடுதியில் தான் நங்கள் தங்கி இந்த கல்லூரியில் படித்து வருகிறோம், கல்லூரிக்கு வந்து செல்ல சரியான பேருந்து வசதி இல்லை, பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறினால், அந்த கல்லூரி மாணவர்கள் பேருந்திலிருந்து இறக்கிவிடுவதும், மாணவிகளிடல் சில்மிஷங்களில் ஈடுபடுவதும், ஆபாசமாக பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது, எனவே தான் இன்று இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தேவையென இந்த மறியலில் ஈடுபட்டு உள்ளோம் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர், இதனால் சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment