Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 3 நாட்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பிரசார நடைபயணம்.

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் 3 நாட்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பிரசார நடைபயணம் மேற்கொண்டு கிராமம், கிராமமாக சென்று பேசுகிறார்.

இது தொடர்பாக தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காவிரி உபரிநீர் திட்டம் தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடிய போதிலும் இந்த மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. பாசன தேவைக்கு தண்ணீர் இல்லாததால் தர்மபுரி மாவட்டம் இன்னும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதால் விவசாயம் செழிக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பிரசார எழுச்சி நடை பயணம் மேற்கொள்கிறார். 

அதன்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஒகேனக்கல்லில் தொடங்கி மடம், பென்னாகரம், நல்லாம்பட்டி, பி.அக்ரகாரம், நாகதாசம்பட்டி, சோமனஅள்ளி, இண்டூர், அதகப்பாடி ஆகிய கிராமங்கள் வழியாக பிரசார நடை பயணம் மேற்கொள்கிறார்.  

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு குரும்பட்டியில் தொடங்கி டீக்கடை பஸ் ஸ்டாப்பில் தொடங்கி சோலைக்கொட்டாய், நடுப்பட்டி, ஒடசல்பட்டி கூட்டுரோடு, கடத்தூர், சில்லாரஅள்ளி, நத்தமேடு பஸ் நிறுத்தம், ஜாலியூர் கிராமத்தில் முடிக்கிறார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தர்மபுரி 4 ரோடு ஆகிய இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 21-ந் தேதி காலை 9 மணிக்கு கம்பைநல்லூரில் தொடங்கி மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, கோபாலபுரம், மெணசி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ஆகிய இடங்களில் அவர் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே பேசுகிறார். 

தர்மபுரி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான காவிரி உபரிநீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெறும் விழிப்புணர்வு எழுச்சி நடைபயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies