வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் நடைபெற உள்ளது. - தகடூர் குரல் #1 மாவட்ட செய்தி இணையதளம்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, August 19, 2022

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் நடைபெற உள்ளது.

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 20.09.2022 அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலம் நடைபெற உள்ளது, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தகவல். 

தருமபுரி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு உரிமைகோரப்படாத 32-வாகனங்களை போக்குவரத்து ஆணையர் சென்னை அவர்களின் கடிதம் எண். D2/35124/06 நாள் 31.08.2006 (சுற்றறிக்கை எண். 28/2006)-ன்படி பொது ஏலத்தில் விட்டு அத்தொகை அரசுக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு கழிவுநிலையில் உள்ள வாகனங்களை உள்ளது உள்ளபடியே பொது ஏலம் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 20.09.2022 அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலக்குழு தலைவர் மற்றும் எலக்குழு உறுப்பினர் முன்னிலையில் ஏலம் விடப்படும். ஏலம் வாய்மொழி ஒப்பந்தபுள்ளி மூலமாகவும், மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தபுள்ளி மூலமாகவும் இருமுறையில் நடத்தப்பட உள்ளது. 

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 26.08.2022 தேதியிலிருந்து விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி, GST உரிம நகலை சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 15-09.2022 தேதி மாலை 3 மணி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்த புள்ளிகளை தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 15.09.2022-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அலுவலக வளாகத்தில் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் (Tender Box) சேர்ப்பிக்க வேண்டும். டேவணித் தொகை ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வங்கி வரைவாக செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 

ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நேரங்களில் 26-08.2022 முதல் 15-09.2022 தேதி வரை உரிய அனுமதி பெற்று பார்வையிடலாம். பின்னர் 20.09.2022-ம் தேதி காலை 11-மணிக்கு பொது ஏல குழு தலைவர் மற்றும் ஏலக்குழு உறுப்பினர் முன்னிலையில் ஏலம் விடப்படும்.

குறிப்பு:

  1. விண்ணப்பக்கட்டணம் ரூ.500/-(ரூபாய் ஐநூறு மட்டும்) செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். (விண்ணப்பத்துடன் வாகன விபரப் பட்டியல் தரப்படும்)
  2. ஏலதாரர். GST உரிமம் பெற்றவராக கட்டாயம் இருத்தல் வேண்டும். ஏலதாரரால் அத்தாட்சி பெற்ற நபர் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அரக்கு சீலிடப்பட்டு இவ்வலுவலகத்தில் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் (Tender Box) 15.09.2022-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சேர்ப்பிக்க வேண்டும். 
இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திருத.தாமோதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad