தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி இருந்த ஒன்பது உடல்களை மை தருமபுரி அமைப்பின் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுதந்திர தினத்தன்று மை தருமபுரி அமைப்பின் எதிர்கால திட்டமாக ஆதரவின்றி இருக்கும் உடல்கள், ஏழ்மையில் இறந்தோரை நல்லடக்கம் செய்ய உறுதி ஏற்றுக் கொண்டனர், அதன் அடிப்படையில் நேற்று தருமபுரி நகர துணை காவல் ஆய்வாளர் திரு.சுந்தரேசன் அவர்களின் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆதரவின்றி இருந்த ஒன்பது உடல்களை மை தருமபுரி அமைப்பின் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கு உறுதுணையாக இருந்த தருமபுரி நகர காவல் ஆய்வாளர் திரு.நவாஸ், துணை காவல் ஆய்வாளர் திரு.சுந்தரேசன், நகராட்சி தூய்மை அலுவலர் திரு.சுசீந்திரன், மீட்பு அறக்கட்டளை பாலச்சந்தரின், மை தருமபுரி முனைவர் சதீஸ் குமார், தமிழ்செல்வன், அருணாச்சலம், ராகவன், மருத்துவர் முஹம்மத் ஜாபர், சசி தமிழரசன், சார்லஸ், கோகுல், ஸ்ரீ ராம் ஆகியோர் உடல்களை நல்லடக்கம் செய்தனர்.


