Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட இரு வார விழாவினை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட இரு வார விழாவினை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடக்கமாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி  மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம்பரத் குமார் தலைமையில் அலுவலகத்தில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்,‌ பள்ளி வளாகத்தூய்மை செய்தல் பணி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் போல்நாகனள்ளி, மாரியம்பட்டி கிராமத்திலும், கட்டுரை, போட்டி, ஓவியப்போட்டி, பேச்சு போட்டி ஆகியன நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் அதியமான் கோட்டை, அரூர் ஊராட்சி ஒன்றியம் அச்சல்வாடி கிராமத்திலும், மரக்கன்றுகள் அரூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கொட்டாவூர் கிராமத்திலும் நடப்பட்டது. 

அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் சிலைகள் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஒடசல்பட்டி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் போல்நாகனள்ளி கிராமத்திலும்தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தூய்மை பாரத விழிப்புணர்வு சுவர் விளம்பரம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் போளையம்பள்ளி ஊராட்சி அலுவலக வளாகத்தில் வரையப்பட்டது.தூய்மை பாரத விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நேரு யுவ கேந்திராவுடன் இணைந்த இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளால் வீடுதோறும் விநியோகம் செய்யப்பட்டது.

நிறைவாக தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் 75ஆண்டு சுதந்திர தின நிகழ்வு நிறைவு மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக தளவாய் அள்ளி ஊராட்சி தலைவர் தனலட்சுமி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி, எச்சனள்ளி ஊராட்சி தலைவர் லிங்கமாள், அதியமான் கோட்டை ஊராட்சி தலைவர் மாரியம்மாள், அரூர் ஊராட்சி  எச்சனள்ளி ஊராட்சி தலைவர் கிருபாகரன், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் போளையம்பள்ளி ஊராட்சி தலைவர் கலைமணி மாயக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழச்சி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் அரிபிரசாந்த், ஞானராஜ், ஜெய்கணேஷ் ஆகியோர் நேரு யுவ கேந்திராவுடன் இணைந்த இளைஞர் மன்ற நிர்வாகிகள் துணையுடன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies