Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த ஒருவர் கைது.

மகாராஷ்டிர மாநிலம், களிரோலி மாவட்டம், தர்மராஜா அடுத்த பங்கரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டா என்கிற சீனிவாசமுல்லாகவுடு(23). மாவோயிஸ்ட் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவரான இவர் மீது அப்பகுதி போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

இது அவரை மகாராஷ்டிர போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மராட்டிய போலீசார் தமிழகம் வந்தனர், பயங்கரவாதியின் செல்போன் எண்ணை வைத்து அவர் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். 

நேற்று நள்ளிரவு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி மாருதிநகரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக மகாராஷ்டிர போலீசார் ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மராட்டிய போலீசாரின் தகவலின் அடிப்படையில் தமிழக போலீசார்கள் விரைந்து சென்று சிவக்குமார் வீட்டை சுற்றி வளைத்தனர். 

அப்போது வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசமுல்லாகவுடுவை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)சட்டத்தின் கீழ் கைது செய்தனர், பின்னர் அவரை மகாராஷ்டிராவிற்கு அம்மாநில போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies