Type Here to Get Search Results !

காவேரி உபரி நீர் ஏரிகளுக்கு நிரப்ப கோரி 2ஆம் நடை பயணத்தை நிறைவு செய்தார் மரு. அன்புமணி ராமதாஸ்.

ஒகேனக்கல் காவிரி உபரி நீரை பாசனத்திற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். நேற்று ஒகேனக்கல் துவங்கிய முதல்நாள் நடைபயணத்திற்கு பிறகு இன்று 2 வது நாளாக தருமபுரி அடுத்த குரும்பட்டி, சோளக்கொட்டாய், ஒடசல்பட்டி ஆகியே பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,

தருமபுரி மாவட்டத்தில், நிலத்தடி நீரில் புளோரைடு அதிகளவில் உள்ளதால், இப்பகுதி மக்கள் பற்களில் கறைகளுடன் மட்டுமின்றி எலும்பு பாதிப்பு, கருச்சிதைவு மூலை உள்ளிட்ட, பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க, பா.ம.க., 25 ஆண்டுகளாக போராடியதால், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இன்று வரை, தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில், 18 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்தில் போதிய பாசன வசதி, வேலைவாய்ப்பு இல்லாததால், இந்த மாவட்ட மக்கள் அருகே உள்ள மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வேலை தேடி செல்கின்றனர். 

இதை தடுக்க காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பா.ம.க., கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறது. கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற  இடைத் தேர்தலின் போது, தருமபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அப்போது முதல்வர் பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின் இந்த திட்டத்துக்கு நிதியில்லை என்றார். கடந்த சட்டசபை தேர்தலில் போது தி.மு.க.,வும் காவிரி உபரி நீர் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. 

நேற்று வரை 180 டி.எம்.சி., காவிரி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. தருமபுரி மாவட்டத்துக்கான காவிரி உபரி நீர் திட்டத்துக்கு ஆண்டுக்கே, 3 டி.எம்.சி., தண்ணீர் தான் தேவை. இதனால், கடைகோடி பாசன விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர்  திட்டத்தை செயல்படுத்த கோரி பா.ம.க., விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கு கட்சி சார்ந்து அனைவரும் ஆதரவு அளித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான இந்த திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தாவிட்டால், பா.ம.க., போராட்டத்தில் ஈடுபடும்.

இந்திய அளவில் அதிக நேரடி கடன் பெற்ற மாநிலத்தில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இதற்காக, 97 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக செலுத்தி வருகிறது.  தமிழகத்தில் மின்வாரியத்தில், ஒரு லட்சத்துக்கு, 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதுக்கு காரணம், தமிழக அரசின் ஊழல்  தான். தற்போது தேர்தல் வாக்குறுதியில் இலவசம் தேவையா என்பது பேசும் பொருளாக உள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற வளர்ச்சிக்கான இலவச அறிவிப்புக்களை தேவை. ஓட்டுக்கான இலவச மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட இலவசங்கள் தேவையில்லை. 

ஆன்லைன் சூதாட்டதால் தமிழகத்தில், 80க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதை தடை செய்யாமல் தமிழக அரசு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது என கூறினார். அப்போது பா.ம.க., கவுரவு தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி பா.ம.க., தருமபுரி சட்டம்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட  பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies