தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கே.அக்ராஹரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை கட்டிடத்திற்கு மற்றும் குடிநீர் தொட்டிக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து பள்ளி வளாகத்தில் சுற்றியுள்ள பகுதியில் தூய்மை பணியை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியை செய்த இளைஞர்கள் "நம் பள்ளி, நம் பெருமை" என்ற வாசகத்தை உறுதிமொழி எடுத்துக் கொண்டு கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று இதுபோன்ற தூய்மைப் பணியை செய்வோம் என்று இளைஞர்கள் ஆர்வத்துடன் கூறினர்.
பெயிண்ட் வாங்க உதவி செய்த ஈச்சம்பாடி காலனி கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலன், நவலை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் மக்கள் நீதி மய்யம் அரூர் ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஆகியோர் உதவி செய்தனர்.
இப்பணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்


