பென்னாகரம் ஒன்றியம் மாதேஹள்ளி ஊராட்சி பிள்ளப்பநாயக்கனஹள்ளி துவக்கப்பள்ளி ஊராட்சி ஆன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர், இப்பள்ளி அமைந்துள்ள நிலத்தை, சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது, காரணம் இப்பள்ளியை சுற்றி உள்ள விவசாய நிலங்கள், மற்றும் சுற்றுச்சுவர் இல்லாதது தான் காரணம் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 15ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பொதுமக்கள் சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டது, எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



