இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜிகே மணி எம்எல்ஏ கூறியதாவது
ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் நாள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள். ஒகேனக்கல் மட்டுமல்லாமல் காவிரி ஆறு செல்லும் பகுதிகளான சேலம், நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, பூம்புகார் வரை உள்ள ஆற்றுப்பகுதிகளில் மக்கள் புனித நீராடி வருவது வழக்கம்.
தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

