ஆனால் அங்குள்ள்ள மீனவர்கள் மட்டும் ஆற்றுக்கு சென்று ஆபத்தை உணராமல் மீன்பிடித்து வருகின்றனர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து வரும் நிலையில் தமிழகம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடிர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இன்று காலை 50 ஆயிரம் கன அடியாக வந்துக்கொண்டிருந்த நீர் வரத்து படிப்படியாகஅதிகரித்து இன்று மாலை வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிநீராக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற மீனவர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தெரியாமல் இன்று அதிகாலையிலியே மீன்பிடிக்க சென்றுவிட்டு மீண்டும் மீன்களை பிடித்துக்கொண்டு மாலை நடைபாதை வழியாக வெள்ளத்தில் மெல்ல நடந்து வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது தண்ணீரில் இழுவை அதிகரித்ததால் கோவிந்தராஜியை தண்ணீர் அடித்து சென்றது. அப்போது இதனை பார்த்துக்கொண்டிருந்த தீயணைப்பு மீட்டு துறையினர் மற்றும் காவல்துறையினர் கோவிந்தராஜியை கயிறு போட்டு உடனடியா உயிருடன் மீட்டனர்.

