இந்த பயிற்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமை தாங்கினார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் மாதவன் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.
மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி சார்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும்போது, ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அக்குழுவில் இடம் பெற்றிருக்கும் 20 உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இக்குழுவின் முக்கியமான பணிகள் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் கற்றல் நிலைபாடுகள் சார்ந்து விவாதித்தல், உடல்நலம் சார்ந்து கவனம் செலுத்துதல், பள்ளியின் வளங்களை மேம்படுத்துதல், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து எவ்வாறு பள்ளியின் தரத்தை முன்னேற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்வது என்பது போன்ற கருத்துக்கள் பேசப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் கலந்துரையாடல் செய்து விவாதிக்கப்பட்டு பள்ளி மேலாண்மை குழு பள்ளி வளம் சார்ந்த திட்டம் தயாரித்தல் உள்ளிட்டவைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இப்ப பயிற்சியில் மேலாண்மை குழு தலைவி கங்கா, வார்டு உறுப்பினர் முனியப்பன், வளர்மதி ஆசிரியர் உட்பட 20 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


