பென்னாகரத்தில் உள்ள மளிகை கடையில் குட்காவை பதுக்கி விற்ற வட மாநில வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் போதைப் பொருளான குட்கா மளிகை கடைகளில் விற்கப்படுவதாக பென்னாகரம் போலீஸ் துணை சூப்பரண்டு இமயவரம்பன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் மளிகை கடைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷூலாராம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ குட்கா தனிப்படை போலீசால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஷிலாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மளிகை கடையில் குட்கா பதுக்கி விற்கப்பட்ட சம்பவம் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


