பாலக்கோடு அடுத்த காவாப்பட்டியில் மீனா சந்துக்கடை என கூறப்படும் டீ கடையில் மறைமுகமாக விற்பனை செய்து வந்த சந்துக்கடை மீனாவின் வீடியோ வலைத்தளங்களிலும், பிரபல தொலைக்காட்சி செய்திகளிலும் வெளியாகி வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக மதுபானங்களை கூடுதல் விலைக்கு மீனா (வயது50) என்பவர் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பாலக்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் மீனாவை கைது செய்து 50 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

