தருமபுரி அடுத்த ரெட்டிஅள்ளி, வெண்ணாம்பட்டி, இலக்கியம்பட்டி, எர்ரப்பட்டி பகுதியில் சுமார் மொத்தம் 17.52இலட்சம் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்மங்களை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் SP. இன்று திறந்துவைத்தார்.ரெட்டிஅள்ளி, வெண்ணாம்பட்டி, இலக்கியம்பட்டி, எர்ரப்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளும் குறைந்த மின் அழுத்தம் அடிக்கடி ஏற்பட்டுவந்தது, இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர், இதனை சரிசெய்யக்கோரி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்கள் சட்டமன்றத்தில் 59 இடங்களில் புதிய டிரான்ஸ்மங்களை அமைத்து மின்னழுத்த குறைபாட்டை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் அவர்களின் இணங்க பல இடங்களில் புதிய ட்ரான்ஸ்பார்ம்கள் மின் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக இன்று எர்ரப்பட்டி பகுதியில் 4.50இலட்சம் பதிப்பிட்டிலும், ரெட்டிஹள்ளி பகுதில் 6.50இலட்சம் மதிப்பீட்டிலும், வெண்ணாம்பட்டி பகுதியில் 6.52இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகளின் இயக்கத்தை தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்கள் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, வரதராஜன் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் இந்திராணி, உதவி செயற்பொறியாளர் பசுபதி, உதவி பொறியாளர் அமுல்ராஜ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சோனியா காந்தி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

