தருமபுரி மாவட்டம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள் அரூர் இணைந்து 75- வது சுதந்திர தின விழாவினை தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகளுக்கு இணங்க அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற தலைப்பை கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள்,முன்னாள் இராணுவத்தினர் சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.சக்திகுமார் தலைமை வகித்தார், முன்னாள் இராணுவ சங்கத்தலைவர் திரு. மணிவண்ணன், செயலாளர் திரு.மணி,பொருளாளர் திரு.ரமேஷ் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கே.கோபிநாத் அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.