தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் திருமதி மல்லிகா அவர்களின் தலைமையில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கை பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்து வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு கூட்டத்தில் மொரப்பூர் காவல் துறை ஆய்வாளர் திருமதி வசந்தா அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார். காவல்துறை சார்பில் இராஜேந்திரன்,செல்வி,தீபா,சின்னம்மாள்,கலந்து கொண்டனர்.
இதில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு உதவி தலைமையாசிரியர் நாகேந்திரன் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.