தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈச்சம்பாடி கிராமத்தில் பெருமாள் என்பவரின் ஆட்டு பட்டியில் 20க்கு மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
அனைத்து ஆடுகளும் கழுத்துப் பகுதிகளில் ரத்தம் உறிஞ்சப்பட்டு இறந்து கிடந்தது, இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு நேரத்தில் வரும் மிருகம் என்ன என்பது பொது மக்களுக்கு தெரியவில்லை கே. ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் கால்நடை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று அப்பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


