விழாவில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மன்ற பெயர் பலகையினை திறந்து வைத்து, 75வது சுதந்திர தினத்தினை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் மரக்கன்றுகள்நட்டு வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கோமதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தசாமி, மற்றும் வ ஊ சி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சந்தோஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார். மேலும் பாரத தேசத்தின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு நேரு யுவ கேந்திரா அலுவலக வளாகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மாரியம்பட்டி, சி.புதூர்,போல்நாகனள்ளி, கொத்தமல்லி காரன்கொட்டாய், ஏரியூர் ஒன்றியம் கனபதிநகர் அஜ்ஜனள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பட்டுகோனம்பட்டி, பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் ஜோதிஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர் மன்றத்தினரால் தன்னார்வ அடிப்படையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, மரக்கன்றுகள் நடுதல், கலைநிகழ்ச்சிகள், கட்டுரை, ஓவியப்போட்டி விநாடி வினா, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கப்படடது.
நிகழ்ச்சிகளில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் மற்றும் முன்னாள் தேசிய இளைஞர் தொண்டர்கள் பிறைசூடன், சந்துரு, அசோக்குமார்மற்றும் சம்மந்தப்பட்ட கிராம இளைஞர் மன்ற நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


