ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவி சி.சிவரஞ்சனி வரவேற்புரை வழங்கினார். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.தலைமை நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சா.எழிலன் முன்னிலையுரை வழங்கினார், கல்லூரியின் நிர்வாக மேலாளர் ரா கணேஷ் நோக்கவுரை வழங்கினார்.
கல்லூரியின் துறைத்தலைவர்கள் நா.நாகராஜ், சிமிலா, சந்திரன்,கோமதி, அனந்த லட்சுமி பாலாஜி, புஷ்பா, சுகுணா, சிவசக்தி, முனைவர் சி.தமிழரசு , முனைவர் அ.இம்தியாஸ், சத்தியமூர்த்தி, சதீஸ்குமார், பெருமாள், ரவிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர், முதல்வர், நிர்வாக அலுவலர் போன்றோர் நினைவுப் பரிசுகள் வழங்கினார்கள். நிறைவாக மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர் எம்.லோகேஷ்குமார் நன்றி கூறினார். இரண்டாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் வே.விசாக், வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ச.காவியா உள்ளிட்டோர் நிகழ்வை தொகுத்து வழங்கினர். நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



