தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 60-வது பிறந்தநாள் மற்றும் மணி விழாவை விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பாக கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் குண்டு சரவணன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் பிரகாஷ், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை தொகுதி துணை செயலாளர் ஆட்டோ நாகராஜ் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து எழுச்சித்தமிழரின் பிறந்தநாளை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர், இதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விசிக கட்சியின் நிர்வாகிகள் சந்திரன், தேவன், சூரி, ஹரி, கார்த்திக், இளையராஜா, பிரதாப் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.