நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாட்களாக (ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் நடைபெற்ற வல்வில்ஓரி வில்வித்தை போட்டியில் நமது தர்மபுரியை சேர்ந்த வெ.பிரதீஷ்வெங்கட் 8 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அவருக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பதக்கம் வழங்கினார் இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஹைத்ராபாத்,செகண்ட்ராபாத், ஜார்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் இவ்வில்வித்தை போட்டில் கலந்துக்கொண்டனர்.
இப்போட்டி மூன்று பிரிவுகளில் நடைப்பெற்றது, முதலில் தேர்வு சுற்று இரண்டாவது தகுதி சுற்று கடைசியாக இறுதிச்சுற்று மூன்று பிரிவிலும் முதலிடம் பெற்று தங்கம் வென்றார், இவர் தற்போது அமலா மழலையர் மற்றும் தொடக்க ஆங்கிலப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் தர்மபுரி டிராகன் பயிற்சி பள்ளியில் மாஸ்டர் திரு.சிவா அவர்களிடம் பயிற்சி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


