தர்மபுரியில் ஒர்க் ஷாப்பில் நின்றிருந்த லாரி டீசல் டேங்க் வெடித்து இரண்டு லாரி மற்றும் 3 டூவீலர்கள் எரிந்தன.
தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையப்பன் ஆட்டோ டீசல் ஒர்க்ஸ் இல் பழுது பார்ப்பதற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து திடீரென டீசல் டேங்க் வெடித்து பக்கம் இருந்த இன்னொரு லாரியின் மீது சென்று அதிலிருந்து டீசல் டேங்க் வெடித்து இரண்டு லாரிகளும் மலை மேல வேணும்னு தீப்பிடித்து எறிந்தன.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து இரண்டு லாரிகள் மற்றும் 3 டூவீலர்களை பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர் உயிர் சேதமும் எதுவும் நடைபெறவில்லை.

