தமிழகம் முழுவதும் பயணித்து சமூக களப் பணியாளர்களை ஊக்குவித்து வரும் எண்ணங்களின் சங்கமம் - சென்னை NDSO அமைப்பின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் சிறப்புற சமூக பணியாற்றிவரும் 75 சமூக சேவை அமைப்புகளுக்கு விருதும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தருமபுரி ரயில்வே திருமண மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்விற்கு தருமபுரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் S.P. வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்.
தருமபுரி மாவட்டத்தின் மூத்த சமூக சேவகரும் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் அரிமா. K.A.மாணிக்கம், சென்னை NDSO அமைப்பின் நிறுவனர் JP, உரிமையியல் நீதிபதி. ஆனந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 75 விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை நீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் சரவணன் ஒருங்கிணைத்தார். முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

