தருமபுரி மாவட்டத்தில் அதிகபடியான கஞ்சா விற்பனை அதிகம் நடைபெறுவது அதிகரித்துவருகிறது, காவல்துறையும் இதனைக் தடுக்க பல்வேறு வழிகளில் எடுத்து வருகிறது, இருப்பினும் தெடர்ந்து கஞ்சா வியாபாரம் அதிகளவில் நடைபெறுவதாகவும், இதனால் மாணவர்கள், சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகிவருவது கவலையடையும் வகையில் உள்ளது, இதனை தடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தருமபுரி மாவட்ட காவல்துறையினருக்கு உத்திரவிட்டனர்.
கஞ்சா விற்பனையை தடுக்க தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் தலைமையில், தனிப்படை அமைத்து கடந்த 10 நாட்களாக மேலாக கண்காணித்து வந்தனர். இதன் விளைவாக தருமபுரி அடுத்த பூசாரிப்பட்டியில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மூதாட்டி ஒருவரிடம் இருபதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் அந்த மூதாட்டியிடமிருந்து 12 கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த பூங்கொடி (60) அந்த என்கிற மூதாட்டி ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து அதனை தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சில்லரையாக சப்பளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மூதாட்டியிடமிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து மூதாட்டியை கைது செய்தனர்.
இது குறித்து டிஎஸ்பி வினோத் கூறும் போது; தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தோம், கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லரையில் விற்பனை செய்த மூதாட்டியை கைது செய்துள்ளோம். இதனால் தருமபுரி, சேலம் ஈரோடு மாவட்டங்களில் கஞ்சா நடமாட்டம் குறைய வாய்ப்புள்ளது என கூறினார்.
மேலும் தருமபுரி உட்கோட்டத்தில், 74 பேர் கஞ்சா விற்பனை செய்வதை கண்டறிந்துள்ளோம் இதில் ஐடிஐ மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் ஈடுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து இது போன்ற குற்றசம்பவத்தில் ஈடுப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அதே போல் 12 கிராமங்களில் அதிகளவில் போதை பொருட்கள் பயன்படுத்து கண்டறியப்பட்டுள்ளது, அதனை தடுக்கும் முயற்சில் ஈடுப்பட்டுள்ளோம் என கூறினார்.


