தருமபுரி ஊராட்சி ஒன்றியம் மணிப்பூர்,எஸ். கொட்டாவூர், கிருஷ்ணாபுரம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பழனி கவுண்டன் கொட்டாய், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி, போளையம்பள்ளி, அரூர் ஊராட்சி ஒன்றியம் அம்பேத்கர் நகர்,வேடகட்டமடுவு, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் கே.குள்ளாத்திரம்பட்டி, இந்திரா நகர் - நாகமரை உள்ளிட்டவை ஆகும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்த, அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன், இலக்கயம்பட்டி அரசு ஆஸ்டல் இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார். மேலும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மாரியம்பட்டி கிராமத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட மாரத்தன் ஓட்டம் நடத்தப்பட்டது.
மாரத்தன் ஓட்டத்திற்கு பாப்பாரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தயாளன் முன்னிலை வகித்தார். ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நேரு யுவ கேந்திராவின் சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
