Type Here to Get Search Results !

ஜெயம் NGOவின் அறச்சுடர் விருது விழா.

தருமபுரி, பென்னாகரம் பகுதியில்  மக்கள் தொண்டாற்றி வரும் "ஜெயம் சமுதாய வள மையம்" என்ற அமைப்பு உள்ளது. இவ்வமைப்பின் சார்பில் பென்னாகரம் பகுதியில் கொரோனா காலத்தில் களத்தில் இறங்கி தொண்டாற்றிய 25 சமூக சேவகர்களுக்கு "அறச்சுடர் விருது" வழங்கப்பட்டது. 

மேலும் கிராமப்புறங்களில் ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களது படிப்பு செலவிற்காக நிலையான வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி போன்ற கணக்குகளை துவக்கி கல்வி செல்வத்திற்காக நிதியுதவியும் அளித்து வருகிறார் ஜெயம் NGO அமைப்பின் இயக்குநர் திரு.கென்னடி அவர்கள்.

இந்நிகழ்வில் பென்னாகரம் ஒன்றிய தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் அவர்கள், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி அவர்கள் வணிகர் சங்க தலைவர் சத்ய நாராயணன் அவர்கள், தகடூர் (தருமபுரி) இளைஞர் சங்கமத்தின் பிறைசூடன் அவர்கள், இந்தியன் பில்லர்ஸ் வினோத் அவர்கள், பொம்மிடி முருகேசன் அவர்கள் மற்றும் நற்சுவை நாட்டுச் சர்க்கரை சுகுமார் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies