ஏரியூர் அருகே 2 கோவில்களில் உண்டியல் திருட்டு. ஏரியூர் பகுதியில் தொடரும் உண்டியல் திருட்டு.
ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் முனியப்பன் ஆலயம் ஆகிய இரண்டு ஆலயங்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்து உண்டியல் பணம் திருடு போய் உள்ளது. மேலும் அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தாலியும் திருடு போயுள்ளது.
ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், 3 கோவில்களில் உண்டியல் உடைத்து கோவில் நகை, பணம் திருடு போயிருந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதனால் இப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த திருட்டுகள் குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

