Type Here to Get Search Results !

இது திராவிட மாடல் ஆட்சி, எல்லோருக்குமான ஆட்சி என அரசு அதிகாரியிடம் சீரிய தருமபுரி MP.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமைந்துள்ள ஆலாபுரம் ஏரியை சுமார் 1.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார் தொடங்கி வைக்க வந்திருந்தார். அங்கே பொதுப்பணித்துறை சார்பில் பூமி பூஜை செய்ய ஐயர் ஒருவர் அழைக்கப்பட்டு, பூஜைக்கான பொருட்களை வைத்திருந்தனர். 

இதைக்கண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார் பொதுப் பணித்துறை அதிகாரியிடம் "என்ன இது? கிருத்துவ மத பாதிரியார் எங்கே? இசுலாம் மத இமாம் எங்கே?, இது திராவிட மாடல் ஆட்சி, எல்லோருக்குமான ஆட்சி, இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என உங்களுக்கு தெரியாதா, விதிமுறைகள் வழங்கவில்லையா" என கோபத்துடன் கேட்டார். 

அந்த பொதுப்பணித்துறை அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரிடம்  மன்னிப்பு கேட்டார். மேலும் இது அனைவருக்குமான ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, ஒரு மதத்தினரை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்துவது தவறு, அனைத்து மதத்தினரையும் அழைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தெரிவித்தார். 

அனைத்து பூஜை பொருட்களையும் அகற்றிவிட்டு ஏரியை சீரமைக்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies